என் மலர்
இந்தியா

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
- யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள்.
- அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
ஜம்முகாஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3-ந்தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் செல்வார்கள். மொத்தம் 12 லட்சம் பேர் அமர்நாத் யாத்திரை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யாத்ரீகர்கள் பல்டால் என்ற பாதையையும், பஹல்காம் வழியையும் பயன்படுத்தி புனித குகையை சென்றடைவார்கள்.
இதற்கிடையே லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரித்து உள்ளது. பிர்பஞ்சால் காட்டில் மறைந்து இந்த தாக்குதலை நடத்தலாம் என கருதப்படுகிறது. இதை தொடர்ந்து அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ராணுவ தளபதி பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து இருந்தது.






