search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு இல்லை
    X

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு இல்லை

    • கேபினெட் மந்திரிகள், மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு
    • இந்திய அரசின் செயலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு

    ஜி20 மாநாட்டையொட்டி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது.

    ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இன்றுகாலை தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேவகவுடா உடல்நலத்தை காரணம் காட்டி பங்கேற்க இயலாது எனக் கூறிவிட்டார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவர் கேபினெட் மந்திரிக்கு சமமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கேபினெட் மந்திரிகள், மாநில முதல்வர்கள் ஆகியோர் அழைக்கப்படடுள்ளனர். இந்திய அரசின் அனைத்து செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகழ்பெற்றவர்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளனர்.

    Next Story
    ×