என் மலர்
இந்தியா

ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் போராட்டம்: மறுபக்கம் இரண்டு SPORTS மசோதாக்கள் நிறைவேற்றம்
- பீகார் SIR தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்.
- ராகுல் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. இன்று தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இதனால் பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மக்களவையில் விளையாட்டுத்துறை தொடர்பான இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெறும்போது, பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராகுல் காந்த உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், உறுப்பினர்கள் அவைக்கு திரும்பிய போதிலும், முழக்கமிட்டனர். இதற்கிடையே சுருக்கமான விவாத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா
இந்த மசோதா விளையாட்டு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, மற்றும் விளையாட்டு வீரர்களின் நலன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான தயாரிப்பு மற்றும் சர்வதேச அளவில் இந்திய விளையாட்டு வீரர்களின் பங்களிப்பை மேம்படுத்துவது இதன் முக்கிய இலக்குகளாகும்.
தேசிய விளையாட்டு வாரியம் (NSB):
விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், விதிமுறைகளை வகுக்கவும் ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும்.
மத்திய அரசின் நிதியுதவி பெறுவதற்கு, அனைத்து சம்மேளனங்களும் இந்த வாரியத்தில் அங்கீகாரம் பெற வேண்டும்.
தேர்தல் முறைகேடு, நிதி தவறாகப் பயன்படுத்துதல், அல்லது ஆண்டு தணிக்கைக் கணக்கு வெளியிடத் தவறினால், சம்மேளனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த வாரியத்திற்கு உள்ளது.






