search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்-  பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்
    X

    கர்நாடகா சட்டசபை தேர்தல் லைவ் அப்டேட்ஸ்- பரபரப்பை எகிறச் செய்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்

    • கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.
    • பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 2615 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இந்த வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Live Updates

    • 10 May 2023 3:51 AM GMT

      சிகாரிபுரா தொகுதியில் எடியூரப்பா தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடும் அவரது மகன் விஜேந்திராவும் வாக்குப்பதிவு செய்த நிலையில், செய்தியார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "மோடியின் மேஜிக் எங்களுக்கு அதிகப் பெரும்பான்மை தரும். இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 130 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். லிங்காயத் சமூகம் மட்டுமல்ல, மற்ற அனைத்து சாதியினரும் பாஜகவுடன் உள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாக தோல்வி அடையும்" என்றார்.

    • 10 May 2023 3:35 AM GMT

      வாக்களித்த பிறகு கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், " மக்கள் அனைவரும் கூடிய விரைவில் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நான் 100% உறுதியாக நம்புகிறேன். 75-80% க்கும் அதிகமானோர் பாஜகவை ஆதரிப்பார்கள்.நாங்கள் 130-135 இடங்களை வெல்வோம். பி.ஒய்.விஜயேந்திரா இங்கு 40,000 ஓட்டுகளுக்கு மேல் பெறுவார். அதிகப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை" என்கிறார்.

    • 10 May 2023 3:30 AM GMT

      வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "எங்கள் கட்சி பிரச்சாரம் செய்த விதம் மற்றும் மக்கள் எதிர்வினையாற்றிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மக்கள் வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

    • 10 May 2023 3:10 AM GMT

      கர்நாடக சட்டசபை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பெங்களூரு, ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார்.

    • 10 May 2023 3:09 AM GMT

      கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா. தனது சொந்த தொகுதியான சிகாரிபுராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

    • 10 May 2023 2:44 AM GMT

      கர்நாடக மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், ஹுப்பள்ளியில் உள்ள அனுமான் கோவிலில் முதல்வர் பசவராஜ் பொம்மை வழிபாடு செய்தார். அவர் ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், ஹூப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பசவராஜ் பொம்மை வாக்களித்தார்.

    • 10 May 2023 2:21 AM GMT

      கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, ஷிகாரிபுராவில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்று வழிபாடு நடத்தினார். இவரது மகன் பி.ஒய்.விஜயேந்திரன் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • 10 May 2023 2:09 AM GMT

      கர்நாடகாவில் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வர வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • 10 May 2023 2:02 AM GMT

      கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஓட்டு போட்டார். பெங்களூரு சாந்தி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலையிலேயே அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.

    Next Story
    ×