search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லைவ் அப்டேட்ஸ்: புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1
    X

    லைவ் அப்டேட்ஸ்: புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1

    • ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
    • ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.

    இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.

    தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    Live Updates

    • 2 Sep 2023 6:39 AM GMT

      ராக்கெட்டின் 3ம் கட்ட செயல்பாடு வெற்றிகரமாக நடந்துள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.

    • 2 Sep 2023 6:32 AM GMT

      2வது கட்ட செயல்பாடு இயல்பாக நடந்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • 2 Sep 2023 6:31 AM GMT

      108 கி.மீ வேகத்தில் ராக்கெட் பயணித்துக் கொண்டிருக்கிறது ஆதித்யா எல்-1.


    • 2 Sep 2023 6:30 AM GMT

      தொடர்ந்து, ஆதித்யா எல்1 லெக்ராஞ்சி புள்ளியை நோக்கி பயணிக்கும்.

    • 2 Sep 2023 6:29 AM GMT

      அடுத்த 63 நிமிடங்களில் பூமியில் இருந்து 19,500 கி.மீ உயரத்தில் சுற்றுவட்ட பாதையை அடையும்.

    • 2 Sep 2023 6:22 AM GMT

      சூரியனை நோக்கிய பயணத்தில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1.

    • 2 Sep 2023 6:00 AM GMT

      ஆதித்யா எல் 1 குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், " தொழில்நுட்ப ரீதியாக எல் 1 சரியான புள்ளியில் நிற்பதும், அதைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையைக் கொண்டிருப்பதும், அது மிகவும் துல்லியமான கண்டுபிடிப்புத் தேவைகளுடன் ஐந்தாண்டுகள் உயிர்வாழ்வதும் மிகவும் சவாலானது. இது விஞ்ஞான ரீதியாக பலனளிக்கும். ஏனென்றால் ஏழு கருவிகள் அங்கு என்ன நடக்கிறது என்பதன் இயக்கவியல் மற்றும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்" என்றார்.

    • 2 Sep 2023 5:52 AM GMT

      அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்டவை சூரிய ஆய்வில் உள்ளன. அமெரிக்காவின் நாசா மட்டுமே அதிகபட்சமாக 14 சூரிய பயணங்களை மேற்கொண்டுள்ளது.

    • 2 Sep 2023 5:49 AM GMT

      7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்கின்றன. 3 பேலோடுகள் லெக்ராஞ்சியன் புள்ளியில் உள்ள துகள்கள், புலங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ளும்.


    • 2 Sep 2023 5:48 AM GMT

      சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க 7 முக்கிய கருவிகளை விண்கலம் சுமந்து செல்கிறது.

    Next Story
    ×