search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    100 அல்ல... 1000 அல்ல... 1.22 கோடி லிட்டர் பீர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    100 அல்ல... 1000 அல்ல... 1.22 கோடி லிட்டர் "பீர்"களை பறிமுதல் செய்த அதிகாரிகள்

    • பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வருமான வரித்துறையினர் 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
    • குல்பர்கா தொகுதியில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

    மக்களவை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, மது வழங்குவதை தடுக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறை அதிகாரிகளையும் முடுக்கிவிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கென சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் பணம், மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மைசூரு மாவட்டம் சாமராஜநகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கலால் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 98.52 கோடி ரூபாய் மதிப்பிலான 1.22 கோடி லிட்டர் பீர்களை பறிமுதல் செய்தனர். இந்த தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வருமான வரித்துறையினர் மற்றும் எஸ்எஸ்டி 3.53 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    மேலும் பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வருமான வரித்துறையினர் 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

    எஸ்எஸ்டி அதிகாரிகள் கலபுர்கி மாவட்டத்தில் உள்ள குல்பர்கா தொகுதியில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். உடுப்பி-சிக்மங்களூரு தொகுதியில் 45 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

    Next Story
    ×