என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பலாப்பழத்தை வெறும் கைகளால் பிய்த்து சாப்பிடும் சிங்கவால் குரங்கு- வீடியோ
- வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவற்றில் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த வீடியோக்கள் பயனர்களிடம் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சிங்கவால் குரங்குகள் வெறும் கைகளால் பலாப்பழத்தை பிய்த்து சுளைகளை சுவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், 2 சிங்கவால் குரங்குகள் பலா மரத்தில் ஏறி பழுத்த பலாப்பழத்தை பற்களால் கடித்தும், வெறும் கைகளால் பிய்த்து எடுத்து சுளைகளை சுவைக்கும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ குறித்து சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், 'இயற்கையின் கொடையை புத்துணர்ச்சியுடன் சுவைக்கும் சிங்கவால் குரங்குகள். இந்த வகை குரங்குகள் தென்மேற்கு இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கின்றன' என குறிப்பிட்டுள்ளார்.