search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்ட முடிவு
    X

    பிரதமர் மோடி

    அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்ட முடிவு

    • அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சி பா.ஜ.க.வின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. மாநகராட்சியின் மருத்துவ கல்வி அறக்கட்டளை (மெட்) சார்பில் அகமதாபாத் மணி நகரில் ஒரு மருத்துவக் கல்லூரி நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், ஏ.எம்.சி. மெட் மருத்துவ கல்லூரி என அழைக்கப்படும் அந்தக் கல்லூரிக்கு நரேந்திர மோடி மருத்துவ கல்லூரி என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    இந்த மருத்துவக் கல்லூரி பிரதமர் மோடி குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்தபோது கட்டப்பட்டது என அகமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஹிடேஷ் பரோட் தெரிவித்தார்.

    Next Story
    ×