என் மலர்
இந்தியா

லாலு பிரசாத் யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மேல் சிகிச்சைக்காக டெல்லி புறப்பாடு
- லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு (76 வயது) திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. லாலு பிரசாத்திற்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்ததால் கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
எனவே பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக டெல்லி செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு லாலு பிரசாத் யாதவ் புறப்பட்டுச் சென்றார். இரவு ஏழு மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் லாலு புறப்பட்டார்.
Next Story






