search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    2024-க்குள் ரெயில்சேவை மூலம்  காஷ்மீருடன் நாட்டின் பிற பகுதிகள்  இணைக்கப்படும்- மத்திய மந்திரி
    X

    2024-க்குள் ரெயில்சேவை மூலம் காஷ்மீருடன் நாட்டின் பிற பகுதிகள் இணைக்கப்படும்- மத்திய மந்திரி

    • 24 ஆயிரத்து 470 கோடி செலவில் ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு
    • ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது

    நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் காஷ்மீர் ரெயில் சேவை மூலம் நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்படும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜிதேந்திர சிங் கூறுகையில் ''காஷ்மீர் ரெயில்சேவை மூலம் நாட்டின் பிற பகுதிளுடன் இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் இணைக்கப்படும். இதில் உதம்புர் முக்கிய பங்காற்றும்.

    பிரதமர் அறிவித்ததில் ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு மட்டும் 295 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. ஜம்மு நிலையத்திற்கு மட்டும் 259 கோடி ரூபாய் செலவிடப்பட இருக்கிறது. உதம்புர் ரெயில் நிலையத்திற்கு 15.94 கோடி ரூபாயும், புத்காம் ரெயில் நிலையத்திற்கு 15.94 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட இருக்கிறது.

    பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக உதம்புர் மாவட்டத்திற்கு. மோடி தலைமையின் கீழ் இந்த மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மோடிக்கு முன் ஆட்சியில் இருந்த மத்திய அரசு பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்கு எந்த ஆர்வமும் காட்டவில்லை'' என்றார்.

    Next Story
    ×