search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் வெற்றி குறித்து டி.கே.சிவக்குமாரின் கருத்து கணிப்பு மெய்யானது
    X

    காங்கிரஸ் வெற்றி குறித்து டி.கே.சிவக்குமாரின் கருத்து கணிப்பு மெய்யானது

    • சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது.
    • காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தேர்தலுக்கு பின்பு வெளியான 11 கருத்து கணிப்புகளில் 9 கணிப்புகள் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.

    சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது. ஆனால் அனைத்து கருத்து கணிப்புகளையும் மீறி 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூட 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அறிவித்திருந்தார்.

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் மட்டும் யார் என்ன சொன்னாலும், எந்த கருத்து கணிப்புகள் எப்படி கூறி இருந்தாலும், நாங்கள் 141 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தேர்தல் முடிந்த பின்பும், நேற்று முன்தினம் வரையும், அதையே கூறி வந்திருந்தார்.

    அவரது கருத்து கணிப்பே கடைசியில் இறுதியாகி உள்ளது. அவர் கூறியபடி 141 தொகுதிகளுக்கு பதில், 5 தொகுதிகள் மட்டும் குறைவாக 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தான் சொன்னபடி காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×