என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமரை பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி: இறுதியில் வாகனத்தை வழிமறித்த பெண்
    X

    பிரதமரை பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி: இறுதியில் வாகனத்தை வழிமறித்த பெண்

    • பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக ஜார்க்கண்ட் சென்றிருந்தார்.
    • 10 கி.மீ. சாலை நடைபயணம் மேற்கொண்டு, பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜார்க்கண்ட் மாநிலம் சென்றிருந்தார். நேற்று அவர் பகவான் பிர்சா முண்டா நினைவு மியூசியத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் சென்று கொண்டிருந்த பாதையில் திடீரென பெண் ஒருவர் ஓடினார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த பெண் தடுத்து நிறுத்தப்பட்டார்.

    இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது துணை சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள் ஆகியோர் பணியின்போது கவனக்குறைவாக செயல்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அந்த பெண் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர் மாவட்டத்தை சேர்ந்த நபரை கடந்த 2012-ல் திருமணம் செய்ததாகவும், இருவருக்கும் இடையில் 2016-ல் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கணவரிடன் சம்பளம் தன்னுடைய கணக்கில வரவு வைக்க விரும்பியுள்ளார். இதனை பிரதமர் மோடியிடம் வலியுறுத்த டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமரை சந்திக்க முடியவில்லை. 10 நாட்கள் தங்கிருந்தும் பலன் அளிக்கவில்லை. அதன்பின் ஜனாதிபதியை சந்திக்க முயற்சி செய்துள்ளார். அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய தியோகர் வந்துள்ளார்.

    இங்கேயும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்காததால், பிரதமர் பாதுகாப்பு வாகனத்தை மறித்து தன் மீது கவனம் செலுத்துவதற்கு இவ்வாறு செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×