என் மலர்
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு 18 மணி நேரமாகிறது
- வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ததால் சாதாரண பக்தர்கள் தரிசனம் தடைபட்டது.
- திருப்பதியில் 61,699 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதிக அளவில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ததால் சாதாரண பக்தர்கள் தரிசனம் தடைபட்டது. இதனால் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 16 முதல் 18 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 61,699 பேர் தரிசனம் செய்தனர். 25,082 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.55 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Next Story






