என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
ரூ.20 லட்சம் கோடி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஈட்டிய மூலதனம்
- 66 வயதான முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்
- 2024ல் இருந்து பங்கின் மதிப்பு சந்தையில் 14 சதவீதம் அதிகரித்தது
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries).
இந்தியாவின் முன்னணி கோடீசுவரரும் மறைந்த பிரபல தொழிலதிபர் திருபாய் அம்பானியின் மூத்த மகனுமான, 66 வயதான முகேஷ் அம்பானியை தலைவராகவும் செயல் இயக்குனராகவும் கொண்டு இயங்கி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எரிசக்தி, இயற்கை எரிவாயு, சில்லறை வணிகம், தகவல் தொடர்பு, ஊடகம், ஆடை உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால் பதித்து பெரும் வருவாய் ஈட்டி வருகிறது.
இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களில் சந்தை மூலதனத்தில் பெரும் நிதியை ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டி வருகிறது.
இந்நிலையில், இன்றைய பங்கு வர்த்தகத்தில், காலை 11.28 மணியளவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள், பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் மதிப்பில் வர்த்தகமானது.
இதை தொடர்ந்து இந்திய பங்கு சந்தை வரலாற்றில் சந்தை மூலதனத்தில் (market capitalization) ரூ.20 லட்சம் கோடி ஈட்டியுள்ள முதல் நிறுவனம் எனும் பெருமையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பெற்றது.
இதனால், ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பங்கு சந்தை வர்த்தகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இவ்வருட தொடக்கத்தில் இருந்தே ரிலையன்ஸ் பங்குகளின் மதிப்பு 14 சதவீதம் அதிகரித்தது.
மிக துல்லியமாகவும், அதிக துணிச்சலுடனும் ரிலையன்ஸ் பல்வேறு மாறுபட்ட துறைகளில் ஈடுபட்டு, வெற்றிகரமாக நிர்வகித்து வருவாய் ஈட்டுவதால், சந்தை ஏற்ற இறக்கங்களை கடந்தும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தொடர்ந்து மக்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இந்நிறுவனம், ரூ.20 லட்சம் கோடி மூலதனத்தை ஈட்ட முடிந்தது.