என் மலர்
இந்தியா

இந்தியாவில் புதிதாக 186 பேருக்கு தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,501 ஆக சரிவு
- இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 169 ஆக இருந்தது.
- கொரோனா தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 58 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 169 ஆக இருந்தது. இன்று புதிதாக 186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 648 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 240 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 58 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் நேற்றை விட 54 குறைந்துள்ளது. அதாவது 2,501 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் புதிய உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 888 ஆக நீடிக்கிறது.
Next Story