என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா ஜனநாயகத்தின் தாய்- ஜே.பி.நட்டா
    X

    இந்தியா ஜனநாயகத்தின் தாய்- ஜே.பி.நட்டா

    • பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.
    • 370-வது சட்ட பிரிவை காங்கிரஸ் தவறுதலாக பயன்படுத்தியது.

    புதுடெல்லி:

    அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது.

    பாராளுமன்ற மக்களவையில் கடந்த 14 மற்றும் 15-ந் தேதியில் விவாதம் நடைபெற்றது. மேல்சபையில் நேற்று விவாதம் தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உரையாற்றினார்.

    மேல் சபையில் இன்று 2-வது நாள் விவாதத்தில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    "நாம் கொண்டாடும் இந்த விழா, அரசியலமைப்பின் மீதான நமது அர்ப்பணிப்பை, வலுப்படுத்துகிறது. தேசிய இலக்கை நிறைவேற்ற இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.

    இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் என்றும் நமது பிரதமர் கூறினார்.

    நமது அரசியலமைப்பை வடிவமைத்த அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு நாடு கடமைப்பட்டுள்ளது. இந்திய நெறிமுறைகளின் படி ஜனநாயகம் என்பது சுதந்திரம், ஏற்றுக் கொள்ளுதல், சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது. குடிமக்கள் கண்ணியமான வாழ்க்கை நடத்த அனுமதிக்கிறது.

    370-வது சட்ட பிரிவை காங்கிரஸ் தவறுதலாக பயன்படுத்தியது. அவசர கால நிலையில் பலரும் குறி வைக்கப்பட்டனர்.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    Next Story
    ×