என் மலர்tooltip icon

    இந்தியா

    5 வருடத்திற்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை
    X

    5 வருடத்திற்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை

    • தலா 50 யாத்ரீகர்கள் கொண்ட 5 குழுக்கள் உத்தரகாண்ட் எல்லை வழியாக யாத்திரை மேற்கொள்வார்கள்.
    • தலா 50 யாத்ரீகர்கள் கொண்ட 10 குழுக்க்ள சிக்கிம் எல்லை வழியாக யாத்திரை மேற்கொள்வார்கள்.

    ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, வருகிற ஜூன் மாதம் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்குவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியா- சீனா இடையிலான எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் தங்களுடைய பழைய நிலைக்கு திரும்ப ஒப்புக்கொண்டு பின்வாங்கிய பிறகு, இருநாட்டு உறவுகளை மேம்படுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி 50 யாத்ரீகர்கள் கொண்ட 5 குழுக்கள் உத்தரகாண்ட் மாநில எல்லை லிபுலேக் பாஸ் வழியாகவும், 50 யாத்ரீகர்கள் கொண்ட 10 குழுக்கள் சிக்கிம் மாநில எல்லை நாது லா பாஸ் வழியாகவும் செல்வார்கள். இந்த யாத்திரை ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

    kmy.gov.in இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியா கடந்த 2020 ஆம் ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடைபெற்றது. கல்வாண் பள்ளத்தாக்கு தாக்குதல் காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டது.

    Next Story
    ×