என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
    X

    டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

    • நேற்று இரவும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த 24-ந்தேதி இரவு முதல் மறுநாள் வரை டெல்லியில் கனமழை பெய்தது.

    நேற்று இரவும் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை மழை வெளுத்து வாங்கியதால் டெல்லியில் பல சாலைகள் வெள்ளக்காடானது.

    6 மணி நேரத்தில் 8 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், நாளை (30-ந்தேதி) அரியானா, சண்டிகார் மற்றும் டெல்லியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றனர்.

    Next Story
    ×