search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரப்பர் விலையை உயர்த்தினால் கேரளாவில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. தொகுதி கிடைக்கும்- கத்தோலிக்க பேராயர் பேச்சால் சர்ச்சை
    X

    ரப்பர் விலையை உயர்த்தினால் கேரளாவில் பாஜகவுக்கு ஒரு எம்.பி. தொகுதி கிடைக்கும்- கத்தோலிக்க பேராயர் பேச்சால் சர்ச்சை

    • கேரளாவில் ரப்பர் விலையை உயர்த்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஒரு விழாவில் பேசிய பிரதமர் மோடி கேரளாவிலும் பாரதிய ஜனதா கணக்கை தொடங்கும் காலம் வரும் என்று கூறியிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் கத்தோலிக்க விவசாயிகளின் கருத்தரங்கு மற்றும் பேரணி நடந்தது.

    இந்த விழாவில் தலச்சேரி கத்தோலிக்க சபையின் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    கேரளாவில் ரப்பர் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ரப்பர் விலையை உயர்த்த வேண்டும்.

    பாரதிய ஜனதாவுக்கு ஒரு எம்.பி.கிடைக்கும்

    கேரளாவில் ரப்பர் விலையை உயர்த்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ரப்பருக்கான விலையை கிலோ ரூ.300 ஆக அதிகரிக்க வேண்டும்.

    இப்படி விலை உயர்த்தப்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு கேரளாவில் இருந்து ஒரு எம்.பி. கிடைக்கும். இந்த நடவடிக்கையில் இறங்கினால் அவர்கள் கேரளாவில் கணக்கை தொடங்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ரப்பர் விவசாயிகள் கருத்தரங்கில் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானியின் பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கண்டித்தனர். அவர்கள் கூறும்போது எக்காலத்திலும் பாரதிய ஜனதா கேரளாவில் கணக்கை தொடங்க முடியாது என்றனர்.

    ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் பேராயர் மார் ஜோசப் பாம்பிளானியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே ஒரு விழாவில் பேசிய பிரதமர் மோடி கேரளாவிலும் பாரதிய ஜனதா கணக்கை தொடங்கும் காலம் வரும் என்று கூறியிருந்தார். அந்த காலம் வந்துவிட்டது. வடகிழக்கு மாநில தேர்தல் முடிவுகள் கேரளாவிலும் எதிரொலிக்கும் என்று மாநில பாரதிய ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் கூறினார்.

    Next Story
    ×