என் மலர்
இந்தியா

வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம் கூட அவுரங்கசீப்பை ஹீரோவாகக் கருத மாட்டார்: பட்னாவிஸ்
- முன்னதாக NCERT புத்தகங்களில் 17 பக்கங்களில் முகாலய மன்னர்களை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
- சிவாஜி மன்னர் குறித்து ஒரேயொரு பக்கத்திலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
பள்ளிக் கூடங்களில் கடந்த 70 வருடங்களாக வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், எந்தவொரு முஸ்லிமும் முகாலாய மன்னர் அவுரங்கசீப்பை ஹீரொ என கருதிருக்கமாட்டார் என மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில சட்டசபையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பேசியதாவது:-
முன்னதாக NCERT புத்தகங்களில் 17 பக்கங்களில் முகாலய மன்னர்களை பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. சிவாஜி மன்னர் குறித்து ஒரேயொரு பக்கத்திலும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது சிவாஜி மகாராஜாவுக்கு 20 பக்கங்களை உருவாக்கியுள்ளது.
கடந்த 70 வருடங்களில் வரலாறு துல்லியமாக கற்பிக்கப்பட்டிருந்தால், ஒரு முஸ்லிம் கூட அவுங்கரசீப்பை ஹீரோ என கருதியிருக்கமாட்டார். படையெடுத்தவர்களை ஹீரோக்களாகக் கருதுபவர்களை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம்.
திப்பு சுல்தான் நல்லவரா? கெட்டவரா? என்ற விவாதத்திற்கு நான் செல்லவிரும்பவில்லை. எனினும் திப்பு சுல்தான்- சிவாஜி மகாராஜா இடையிலான எந்தவொரு ஒப்பீட்டையும் நாங்கள் எதிர்ப்போம். பிரிட்டீஷ்க்கு எதிராக திப்பு சுல்தான் போரிட்டிருக்கலாம். ஆனால், அவருடைய சொந்த ராஜ்ஜியத்தை காப்பாற்ற அவ்வாறு செய்தார். எனினும், 75 இந்துக்கள், 33 ஆயிரம் நாயர்களையும் கொன்றார்.
இவ்வாறு தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார்.






