என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத்தில் சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை - கள்ளக்காதலனுடன், தாய் கைது
    X

    ஐதராபாத்தில் சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு வைத்து சித்ரவதை - கள்ளக்காதலனுடன், தாய் கைது

    • குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தனர்.
    • உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக போலீசில் புகார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், விஜயவாடா ஒய்.எஸ்.ஆர் காலனியை சேர்ந்தவர் வந்தனா. இவரது மகள் பிரசன்னா (வயது3). வந்தனா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டு தனியாக வசித்து வந்தார். அப்போது ஸ்ரீராம் என்பவருடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    தனது கள்ளக்காதலனுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் குடியேறினார்.

    மகள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தனர். வந்தனா பெற்ற மகள் என்ற ஈவு இரக்கம் இன்றி குழந்தையின் உடல் முழுவதும் சூடு வைத்தார். குழந்தை வலியால் அலறி துடித்தது.

    குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. குழந்தையை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த பகுதி மக்கள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து துன்புறுத்தியதால் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதாக போலீசில் புகார் தெரிவித்தனர்.

    போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து குழந்தையிடம் விசாரணை நடத்தினர். வந்தனா அவரது கள்ளக்காதலனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×