என் மலர்
இந்தியா

வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவன்.. 5-வது குழந்தை பெற்றெடுத்தபோது மனைவி மரணம்
- 5-வது கர்ப்பமானதை யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன். இவரது மனைவி அஸ்மா (வயது35). இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அஸ்மா மீண்டும் கர்ப்பமானார். அஸ்மாவுக்கு முதலில் இரண்டு குழந்தைகளும் ஆஸ்பத்திரியில் வைத்து பிறந்துள்ளது. 3 மற்றும் 4-வதாக அவருக்கு வீட்டில் வைத்தே குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் 5-வது குழந்தையையும் வீட்டில் பிரசவம் பார்த்து பெற்றோருக்கு கணவன்-மனைவி இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனால் 5-வது கர்ப்பமானதை அக்கம் பக்கதத்தினர் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அஸ்மாவுக்கு நேற்று வீட்டில் வைத்து குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிரசவத்தின் போது அஸ்மா பரிதாபமாக இறந்துவிட்டார்.
அவருக்கு பிறந்த குழந்தை பெரும்பாவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. பிரசவத்தின் போது அஸ்மாவுக்கு கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சிராஜூதீன் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் தான் அவர் இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






