என் மலர்
இந்தியா

டெல்லியில் கனமழை- சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்
- சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
- டெல்லியில் நாளை வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, டெல்லியில் நாளை வரை இடியுடன் கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






