search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் தொடர் மழை: பக்தர்கள் அவதி
    X

    திருப்பதியில் தொடர் மழை: பக்தர்கள் அவதி

    • தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது.
    • நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    ஏற்கனவே இரவு முதல் காலை வரை கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தற்போது இடைவிடாது பலத்த மழை பொழிவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடி கடும் குளிரில் வரிசையில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    தொடர் மழையின் காரணமாக திருப்பதி மலையில் ஆங்காங்கே திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சிகளில் ஆனந்த குளியல் போடுகின்றனர்.

    தொடர் மழையால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வாகன ஓட்டுகள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 61,403 பேர் தரிசனம் செய்தனர். 19,126 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×