திருப்பதி கோவிலில் கடும் வெயில் - பக்தர்கள் அவதி #Tirupatitemple

நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.திருப்பதியில் நேற்று 66,885 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் கடும் வெயில் - பக்தர்கள் அவதி #Tirupatitemple
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் காலை முதல் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.

நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.

நேற்று பக்தர்களின் கூட்டம் படிப்படியாக குறைந்தது.

திருப்பதியில் நேற்று 66,885 பேர் தரிசனம் செய்தனர். 26,690 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

ரூ.3.82 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தற்போது திருப்பதி  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் கொளுத்தி வருவதால் வரிசையில் காத்திருந்த முதியவர்கள் குழந்தைகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மோர் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கினர்.

பக்தர்களின் சிரமத்தை அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com