என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
    X

    திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

    • திருப்பதியில் நேற்று 57,863 பேர் தரிசனம் செய்தனர்.
    • ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை தொடங்கியதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இன்று காலையில் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்ட தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 57,863 பேர் தரிசனம் செய்தனர். 31,030 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.04 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    திருப்பதி கோவில் பாபவிநாசம் அருகே உள்ள தும்புரா தீர்த்தம் வனப்பகுதியில் பிடித்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர், தீயணைப்பு துறையினருடன் இணைந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்தில் வனப்பகுதியில் இருந்த மரங்கள், மூலிகை செடி கொடிகள் எரிந்து நாசமானது. அதற்குள் தீ திருப்பதி கோவில் வரை பரவியது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    அப்போது திடீரென லேசான மழை பெய்தது. இதனால் தீ ஓரளவுக்கு கட்டுப்பட்டது. மழை நின்ற பிறகு மீண்டும் தீ பரவியது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    Next Story
    ×