search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- பிலாவல் பூட்டோவுக்கு இந்திய முஸ்லிம்  அமைப்பு பதிலடி
    X

    ஹஜ்ரத் சையது நசீருதீன்,பிலாவல் பூட்டோ

    இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம்- பிலாவல் பூட்டோவுக்கு இந்திய முஸ்லிம் அமைப்பு பதிலடி

    • பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் மந்திரி பயன்படுத்திய வார்த்தைக்கு கடும் கண்டனம்.
    • இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்கள்.

    அஜ்மீர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், அந்நாட்டின் வெளியுறவு மந்திரியுமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் மோடி என அவர் குறிப்பிட்டது இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களில் பிலாவலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவின் ஆன்மீக தலைவரும், அகில இந்திய சுபி சஜ்ஜதன்ஷின் கவுன்சில் தலைவருமான ஹஜ்ரத் சையது நசீருதீன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பயன்படுத்திய விஷம தானமான வார்த்தைக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பிலாவல் பூட்டோ தனது அமைச்சர் பதவியை மட்டுமன்றி ஒட்டு மொத்த தேசத்தை தரம் தாழ்த்தியுள்ளார்:

    பிலாவல் பூட்டோவுக்கு எனது அறிவுரை இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம். எங்களது அரசியல் சாசனம் அனைத்து மதங்களின் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்தியனாக இருப்பதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் பெருமை கொள்கிறார்.

    பாகிஸ்தானிய முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் அதிக பாதுகாப்புடன், நல்ல நிலைமையில் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் வைத்துதான், அமெரிக்க படைகளால் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என்ற செய்தியை பிலாவல் பூட்டோ மறந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×