search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமில்லை- கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு
    X

    சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமில்லை- கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு

    • சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்று கர்நாடக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
    • கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம் சிறை தண்டனையை ரத்து செய்தது.

    கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்த ரங்கராஜ் என்பவர், கடந்த 2015ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து, அந்த பிணத்துடன் உடலுறவு கொண்டுள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த துமகூரு நீதிமன்றம், ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தது.

    இதை எதிர்த்து ரங்கராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.

    கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும், இயற்கைக்கு மாறான உடலுறவு, கற்பழிப்பு போன்ற சட்டப்பிரிவுகள் இந்த குற்றத்திற்கு பொறுந்தாது என்றும் தெரிவித்தது.

    மேலும், இறந்த உடலுடன் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது புதிய சட்டத்தையோ மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனால், சடலத்துடன் உடலுறவு கொண்ட வழக்கில் குற்றவாளி ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பு அளித்துள்ளது.

    Next Story
    ×