search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

    • தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை குஜராத் பாஜக சமன் செய்துள்ளது
    • இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது

    குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 150-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்ற மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சியின் சாதனையை சமன் செய்தது குஜராத் பாஜக. குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்க உள்ளார்.

    அதேசமயம் இமாச்சல பிரதேசத்தில் பிற்பகல் நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 39 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.பாஜக 26 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளதால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

    Live Updates

    • 8 Dec 2022 8:56 AM GMT

      குஜராத்தை அவமதித்தவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.

    • 8 Dec 2022 8:40 AM GMT

      இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, டெல்லி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    • 8 Dec 2022 8:25 AM GMT

      குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் கூறினார்.

      தேர்தல் வெற்றி குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியதாவது:-

      குஜராத் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. குஜராத்தில் வளர்ச்சிப் பயணத்தை மேலும் தொடர மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் பொது சேவையில் உறுதியாக உள்ளார்.

      இவ்வாறு அவர் கூறினார்.

    • 8 Dec 2022 8:19 AM GMT

      குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக. இந்த வெற்றியை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

      குஜராத்தின் புதிய முதல்வர் வரும் 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்பார் எனவும், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்பார்கள் என்றும் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

    • 8 Dec 2022 7:57 AM GMT

      குஜராத் முன்னிலை நிலவரம்:

      பாஜக- 156

      காங்கிரஸ்- 18

      ஆம் ஆத்மி கட்சி 5

      மற்றவை - 3

    • 8 Dec 2022 7:55 AM GMT

      இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் முன்னிலையில் இருப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இனிப்பு வழங்கி கொண்டாடுகின்றனர்.

      முன்னிலை நிலவரம்: காங்கிரஸ் - 40, பாஜக - 25, ஆம் ஆத்மி - 0, மற்றவை - 3

      18 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் இழுபறி

    Next Story
    ×