என் மலர்tooltip icon

    இந்தியா

    மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு பயனளிக்கும் மிருகத்தனமான கருவி ஜி.எஸ்.டி. வரி - ராகுல் காந்தி
    X

    மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு பயனளிக்கும் மிருகத்தனமான கருவி ஜி.எஸ்.டி. வரி - ராகுல் காந்தி

    • ஜிஎஸ்டி ஏழைகளைத் தண்டிப்பதற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • எட்டு ஆண்டுகளில் 18 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

    மோடி அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) அறிமுகப்படுத்தப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆன போதிலும், அது வரிச் சீர்திருத்தம் அல்ல, மாறாக பொருளாதார அநீதி மற்றும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் நெருங்கிய நண்பர்களுக்குப் பயன்படும் ஒரு மிருகத்தனமான கருவி என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜிஎஸ்டி ஏழைகளைத் தண்டிப்பதற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அழிப்பதற்கும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், பிரதமரின் சில பில்லியனர் நண்பர்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நல்ல மற்றும் எளிமையான வரி என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்குக் கிடைத்ததோ, கணக்குத் தாக்கல் செய்வதில் ஒரு பெரும் சிக்கலான நடைமுறை மற்றும் 900 முறைக்கும் மேலாகத் திருத்தப்பட்ட ஐந்து அடுக்கு வரி விதிப்பு முறை. கேரமல் பாப்கார்ன் மற்றும் க்ரீம் பன்கள் கூட இதன் குழப்பமான வலைக்குள் சிக்கியுள்ளன.

    அதிகாரத்துவச் சிக்கல்கள் பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளன. அவற்றால் கணக்காளர்களின் படைகளைக் கொண்டு அதன் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால், சிறு கடைக்காரர்கள், சிறு குறு தொழில்கள் மற்றும் சாதாரண வர்த்தகர்கள் செம்பட்டியல் நடைமுறைகளில் மூழ்கித் தவிக்கின்றனர். ஜி.எஸ்.டி போர்டல் தினசரி தொந்தரவுக்கு ஒரு ஆதாரமாக உள்ளது.

    இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சிறு குறு தொழில்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு ஆண்டுகளில் 18 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

    பெருநிறுவனங்கள் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான வரிச் சலுகைகளை அனுபவிக்கும் நிலையில், பொதுமக்கள் தற்போது தேநீர் முதல் சுகாதாரக் காப்பீடு வரை எல்லாவற்றுக்கும் ஜி.எஸ்.டி செலுத்துகின்றனர்.

    பெட்ரோல் மற்றும் டீசல் ஜி.எஸ்.டி கட்டமைப்பிலிருந்து வேண்டுமென்றே விலக்கி வைக்கப்பட்டுள்ளது, இது விவசாயிகள், போக்குவரத்துத் துறையினர் மற்றும் சாதாரண மக்களைப் பாதிக்கிறது. ஜி.எஸ்.டி நிலுவைத் தொகைகள் பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களைத் தண்டிப்பதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன - இது மோடி அரசின் கூட்டாட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தெளிவான சான்றாகும்.

    ஜி.எஸ்.டி என்பது UPA-அரசின் ஒரு தொலைநோக்கு யோசனையாகும், இது இந்தியாவின் சந்தைகளை ஒன்றிணைப்பதற்கும் வரி விதிப்பை எளிதாக்குவதற்கும் நோக்கமாகக் கொண்டது. ஆனால், அதன் மோசமான அமலாக்கம், அரசியல் சார்பு மற்றும் அதிகாரத்துவத்தின் வரம்பு மீறல் ஆகியவற்றால் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மக்களுக்கும், வணிகத்திற்கும் உகந்ததாகவும், உண்மையான கூட்டாட்சி உணர்வுடனும் இருக்க வேண்டும்.

    சலுகை பெற்ற சிலருக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு வரி அமைப்பு இந்தியாவுக்குத் தேவை, அப்போதுதான் சிறு கடைக்காரர் முதல் விவசாயி வரை ஒவ்வொரு இந்தியரும் நமது நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பங்குதாரராக இருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×