என் மலர்
இந்தியா

அக்டோபர் மாத ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி வசூல்
- ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வந்த சீர்திருத்த நடவடிக்கையால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்தது.
புதுடெல்லி:
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அறிமுகமானது. அதன்பின் ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முந்தைய மாதத்தில் வசூலான வரித்தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த இந்த சீர்த்திருத்த நடவடிக்கையால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்தது. இதனால் மின்னணு சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9 சதவீதம் அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதமாக ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது என தெரிவித்துள்ளது.






