என் மலர்
இந்தியா

மே மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.2 லட்சம் கோடியை தாண்டியது
- மே மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.2.01 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது.
- இது கடந்த ஆண்டு மே மாதம் வசூலான தொகையை விட 16.4 சதவீதம் அதிகம்.
புதுடெல்லி:
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி - ரூ.35,434 கோடி, மாநில ஜிஎஸ்டி- ரூ.43,902 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ.1.09 லட்சம் கோடி, செஸ் வரி- ரூ.12,879 கோடி என மொத்தம் ரூ.2.01 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.
மே மாதத்தில், உள்நாட்டு பரிமாற்றம் மூலம் கிடைக்கும் வருமானம் 13.7 சதவீதம் அதிகரித்து ரூ.1.50 லட்சம் கோடியும், இறக்குமதி மூலம் கிடைக்கும் ஜிஎஸ்டி வருமானம் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.51,266 கோடியும் வசூல் ஆகி உள்ளது என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் ஜி.எஸ்.டி. மூலம் 1,72,739 கோடி ரூபாய் வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதமும் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.2.37 லட்சம் கோடி வசூல் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story






