search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செல்லுங்கள், வெல்லுங்கள்: ஆனால் இந்த இரண்டு விசயங்களில் கவனம்- மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

    • டீப்ஃபேக் தற்போது டிரெண்டிங் ஆகி வருவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • சர்ச்சைக்குரிய வகையிலான பேச்சு, அறிக்கைகளை தவிர்க்கவும்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகளில் பிரதமர் மோடி முழுக்கவனம் செலுத்தி வருகிறார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்கிடையே வேட்பாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட கட்சிப் பணிகளிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்கிறார்.

    இந்த நிலையில்தான் நேற்று மத்திய மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தனது 2-வது முறை ஆட்சிக்காலத்தில் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவது இதுவே கடைசி முறையாகும்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மந்திரிகளை பார்த்து "செல்லுங்க்ள, வெல்லுங்கள், விரைவில் மீண்டும் சந்திப்போம்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும் எந்தவொரு அறிக்கை விடும்போதும் தயது செய்து கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தவறாக ஏதும் கூறிவிடாதீர்கள். தற்போது டீப்ஃபேக் டிரெண்டிங்காக உள்ளது. இதனால் இந்த இரண்டு விசயங்களில் கவமானகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

    நம்முடைய திட்டங்கள் குறித்து பேசும்போது, சர்ச்சைக்குரிய அறிக்கைகளை தவிர்க்க வேண்டும். ஜூன் மாதம் நாம் தாக்கல் செய்யக் கூடிய முழு பட்ஜெட்டில் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) குறித்து முழு பார்வையையும் தெரியவரும்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×