என் மலர்tooltip icon

    இந்தியா

    போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்க பாஜக-வுக்கு வாய்ப்பு கொடுங்கள்: பஞ்சாப் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அமித் ஷா
    X

    போதைப்பொருள் இல்லாத மாநிலமாக்க பாஜக-வுக்கு வாய்ப்பு கொடுங்கள்: பஞ்சாப் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அமித் ஷா

    • கடன், போதைப்பொருட்கள், மத மாற்றங்கள், ஊழல் மற்றும் ரவுடிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் பஞ்சாப் சீரழிந்துவிட்டது.
    • பஞ்சாப் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுபட வேண்டுமென்றால், அதற்கு பாஜக-வின் இரட்டை என்ஜின் ஆட்சி தேவை.

    பஞ்சாப் மாநிலத்தில் பகவத் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மோகாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.

    கில்லி சலான் கிராமத்தில் நடைபெற்ற Badlav (மாற்றம்) பேரணியில் கலந்து கொண்டு அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ், அகாலி தளம், ஆம் ஆத்மிக்கு பஞ்சாப் மக்களாக நீங்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்தீர்கள். தற்போது பாஜக-வுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம்.

    பாஜக-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பஞ்சாப் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க நான் இங்கே வந்துள்ளேன். நாங்கள் பஞ்சாப் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியுடன் ஒரு இளைய சகோதரன் போன்றுதான் இருந்துள்ளோம். தற்போது ஆட்சி அமைப்பதற்காக களத்தில் போராட வந்துள்ளோம்.

    அம்மாமார்கள், சகோதரிகள், மூத்த மக்கள் உள்பட பஞ்சாப் மக்களின் ஆசீர்வாதத்தை பெற நாங்கள் இங்கே வந்துள்ளேன். எங்களுக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தை வழங்குங்கள். மாநிலத்தை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்க யாரேனும் ஒருவரால் முடியுமென்றால், அது நரேந்திர மோடியாலும் பாஜக-வாலும் மட்டுமே முடியும்.

    ஜம்மு- காஷ்மீரில் நாங்கள் 370-வது பிரிவை ரத்து செய்தோம். இன்று, நக்சலியம் முற்றிலுமாக ஒழியும் விளிம்பில் உள்ளது. பஞ்சாப் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுபட வேண்டுமென்றால், அதற்கு பாஜக-வின் இரட்டை என்ஜின் ஆட்சி தேவை.

    இன்று கடன், போதைப்பொருட்கள், மத மாற்றங்கள், ஊழல் மற்றும் ரவுடிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் பஞ்சாப் சீரழிந்துவிட்டது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    Next Story
    ×