search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி20 மாநாடு காரணமாக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மெட்ரோவை பயன்படுத்த வலியுறுத்தல்
    X

    ஜி20 மாநாடு காரணமாக டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மெட்ரோவை பயன்படுத்த வலியுறுத்தல்

    • இன்று காலை முதல் ஞாயிறு நள்ளிரவு வரை பலத்த பாதுகாப்பு
    • பொதுமக்கள் இந்தியா கேட் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தல்

    டெல்லியில் நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் டெல்லி வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டுள்ளார்.

    தலைவர்கள் அனைவரும் டெல்லியில் கூட இருப்பதால், இன்று காலை ஐநது மணி முதல் ஞாயிறு இரவு 11.59 மணி வரையிலான உச்சக்கட்ட பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    டெலிவரி சேவை உள்ளிட்ட அனைத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான மருந்து தொடர்பான சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் இந்தியா கேட், கார்தவ்யா பாத் போன்ற இடங்களில் நடைபயிற்சி, சைக்கிளிங் மற்றும் பிக்னிக் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதி-1 என வரையறுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து ஒழுங்கு படுத்தப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. உள்ளூர் மற்றும் சுற்றுலா வந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டதன்படி, இன்று முதல் 10-ந்தேி வரை மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், மோப்ப நாய்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×