என் மலர்
இந்தியா

ஆந்திராவில் மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற 100 கிலோ மீன்
- கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
- படகுகளில் வந்து காலை முதல் மாலை வரை யர்ரைய்யா உடலை தேடினர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்று கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பல ராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.
கடற்கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இவர்களது மீன்பிடி வலையில் 100 கிலோ எடை கொண்ட கொம்முக்கோணம் மீன் சிக்கியது. வலையில் சிக்கிய மீனை யர்ரைய்யாவால் இழுக்க முடியவில்லை. அப்போது மீன் யர்ரைய்யாவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. தங்கள் கண்ணெதிரிலேயே சகோதரரை மீன் கடலுக்குள் இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் அவர் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து கொர்லைய்யா மீனவ கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் படகுகளில் வந்து காலை முதல் மாலை வரை யர்ரைய்யா உடலை தேடினர். ஆனால் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்த சம்பவம் மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.






