என் மலர்
இந்தியா

ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் 43 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல்.
- வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
அதேபோல் வயநாடு மக்களவை தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவுகள் தொடங்கின.
அதேபோல் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவும் தொடங்கியது.
விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். முதன்முறையாக அவர் அரசியலில் நேரடியாக களம் இறங்கியுள்ளார்.
வருகிற 23 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Live Updates
- 13 Nov 2024 7:51 AM IST
கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னாபட்னா சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்கு செலுத்தி வரும் காட்சி.
- 13 Nov 2024 7:45 AM IST
ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் கங்வார் வாக்குப்பதிவு தொடங்கியதும் தனது வாக்கை செலுத்தினார்.
- 13 Nov 2024 7:31 AM IST
ஜார்க்கண்ட்டில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் வாக்காளர்கள் உற்சாகமாக திரண்டு வாக்களிக்க காத்திருந்த காட்சி.
- 13 Nov 2024 7:29 AM IST
அசாம் மாநிலத்தில் சமாகுரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நாகோன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்கள்.
- 13 Nov 2024 7:04 AM IST
வயநாடு தொகுதியில் 7 மணிக்கு முன்னதாகவே வாக்களிக்க காத்திருந்த பெண் வாக்காளர்கள்








