search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லி சலோ பேரணியை இன்றுமுதல் மீண்டும் தொடங்கும் விவசாயிகள்
    X

    டெல்லி சலோ பேரணியை இன்றுமுதல் மீண்டும் தொடங்கும் விவசாயிகள்

    • 21 வயதான சுப்கரண் சிங் என்ற இளம் விவசாயி மரணம் அடைந்ததால் பேரணி ஒத்திவைப்பு.
    • மார்ச் 10-ந்தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

    டெல்லியை நோக்கி "டெல்லி சலோ" என்ற பெயரில் பேரணியை விவசாயிகள் தொடங்கினர். ஆனால் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய முடியாத வகையில் அரியானா, பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், டிராக்டர்கள் நுழையாத வண்ணம் பல அடுக்குகள் கொண்ட தடுப்புகளை அமைக்கப்பட்டன.

    இதனால் அரியானா, பஞ்சாப் எல்லயைில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த மாதம் 21-ந்தேதி எல்லையில் விவசாயிகளுக்கும், அரியான மாநில போலீசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 21 வயதான சுப்கரண் சிங் என்ற இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவரது மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்கமாட்டோம் என விவசாய சங்கங்கள் தெரிவித்திருந்தன. இதனையொட்டி ஒரு வாரம் கழித்து பஞ்சாப் மாநில போலீஸ், கொலை வழக்காக பதிவு செய்தது.

    இதற்கிடையே பேரணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்தன. அதேவேளையில் பஞ்சாப், அரியானா எல்லையில் விவசாயிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிவித்தனர்.

    அதன்பின் டெல்லியை நோக்கி மார்ச் 6-ந்தேதி (இன்று) மிகப் பிரமாண்ட பேரணி நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால், டிராக்டர்கள் பேரணி நடத்தப்படாது எனத் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த இருக்கிறார்கள். இதனால் டெல்லியை சுற்றியுள்ள மாநில எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 10-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நான்கு மணி நேர ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

    Next Story
    ×