என் மலர்
இந்தியா

களை கட்டிய சேவல் பந்தயம்- ரூ.1.53 கோடி வென்ற விவசாயி
- சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.
- சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.
சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சேவல் பந்தயம் களைகட்டியது.
ஆந்திராவில் மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, டாக்டர் அம்பேத்கர் கோனசீமா, கிருஷ்ணா, போலவரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சேவல் பந்தயம் நடந்தது.
பந்தயங்களில் கலந்து கொண்ட சேவல்கள் மீது பார்வையாளர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பந்தயம் கட்டினர்.
ஆந்திராவில் சேவல் பந்தயத்திற்கு மாநில அரசு தடை விதித்து இருந்தாலும் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பந்தயத்தை தொடங்கி வைப்பதால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பந்தயத்தில் வெற்றி பெறும் சேவல் உரிமையாளர்களுக்கு கார்கள், பைக்குகள், தங்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
கிருஷ்ணா மாவட்டத்தில் பந்தயம் கட்டும் பணத்தை எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டது. சேவல் பந்தயத்தில் கலந்து கொண்டவர்கள் நல்ல நேரம் ஜாதகம் பார்த்த பிறகு தங்களது சேவல்களை பந்தயத்திற்கு விட்டனர்.
சேவல்களின் கால்களில் கூர்மையான கத்தி கட்டப்பட்டு சேவல்கள் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. கத்தி வெட்டுப்பட்டு சில பந்தய சேவல்கள் சம்பவ இடத்திலேயே இறந்தன.
கிழக்கு வாதவரி மாவட்டம், வெங்கட்ராமய்யா பகுதியில் நேற்று நடந்த சேவல் சந்தையில் குடிவாடா பிரபாகர் மற்றும் ராஜமுந்தி ரமேஷ் சேவல்கள் மோதிக்கொண்டன. இதில் ராஜமுந்திரி ரமேஷின் சேவல் வெற்றி பெற்றது. அவருக்கு ரூ.1.53 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் தெலுங்கு மாநிலங்களில் நடந்த சேவல் பந்தயத்தில் ரூ .100 கோடிக்கு மேல் பந்தயம் நடந்ததாக பந்தைய போட்டியாளர்கள் தெரிவித்தனர்.






