search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய பெண்

    • பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, அதன்பின் காதலில் விழுந்துள்ளார்
    • பாஸ்போர்ட் உள்ளதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை

    திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது.

    உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள, அவரது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்பர் திர் மாவட்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை பார்க்க பாகிஸ்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விடுவித்துள்ளனர். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் உள்ளார்.

    இந்த செய்தி வெளிவர ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, அவரது கணவர் அரவிந்த் கூறுகையில் ''அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளது. தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை'' என்றார்.

    அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற திருமணம் முடிந்த பெண், பப்ஜி விளையாட்டு மூலம் இந்திய நபர் மீது காதல் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறார்.

    Next Story
    ×