search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தாழ்வான பகுதியில் புகுந்த வெள்ளம்: காத்திருக்க வேண்டாம், வெளியேறுங்கள் என கெஜ்ரிவால் எச்சரிக்கை
    X

    தாழ்வான பகுதியில் புகுந்த வெள்ளம்: காத்திருக்க வேண்டாம், வெளியேறுங்கள் என கெஜ்ரிவால் எச்சரிக்கை

    • யமுனை ஆற்றில் 1978-ம் ஆண்டுடிற்குப்பிறகு நீர்மட்டம் 207.49 மீட்டரை தாண்டியுள்ளது
    • ஹரியானா தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்க வலியுறுத்துமாறு அமித் ஷாவுக்கு கடிதம்

    தென்மேற்கு பருவமழை காரணமாக வடஇந்தியாவில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்லி, அரியானா உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் கனமழையால் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

    ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்தினிகுண்ட் தடுப்பணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாவல், யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக டெல்லி யமுனை ஆற்றில் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக 205 மீட்டரை தாண்டிய வண்ணம் உள்ளது. 206 மீட்டரை தொட்டாலே அபாயம் கட்டத்தை தாண்டியதாகும். ஆனால் நேற்றிரவு 208.08 மீட்டரை எட்டியது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஆக்கிரிமிக்க தொடங்கியுள்ளது.

    கடந்த 1978-ம் ஆண்டு நீர்மட்டம் 207.49 மீட்டருக்கு உயர்ந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது 45 வருடங்கள் கழித்து 208.08 மீட்டரை தாண்டியுள்ளது. மேலும், டெல்லியில் 208.08 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்தது இதுவே முதல்முறையாகும்.

    அபாயகரமான சூழ்நிலை நிலவுவதால், மக்கள் காத்திருக்க வேண்டாம். கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பள்ளிகளை தற்காலிக முகாமாக மாற்ற கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், அரியானாவின் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து தண்ணீரை குறைத்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்

    டெல்லியில் வெள்ளம் என்ற செய்தி உலகத்திற்கு அனுப்பும் நல்ல தகவலாக இருக்காது. நாம் அனைவரும் இணைந்து டெல்லி மக்களை இந்த சூழ்நிலை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஜி-20 மாநாட்டிற்கு டெல்லி தயாராகி வரும் நிலையில் இந்த கருத்து வலியுறுத்தியுள்ளார்.

    டெல்லி 1924, 1977, 1978, 1995, 2010 மற்றும் 2013 ஆகிய வருடங்களில் வெள்ளத்தை சந்தித்துள்ளது.

    Next Story
    ×