என் மலர்
இந்தியா

தேர்தல் பரபரப்பு: முன்னாள் அமைச்சர் உட்பட 11 தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கிய நிதிஷ் குமார்
- 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- சட்ட மேலவை உறுப்பினர்கள் சஞ்சய் பிரசாத் மற்றும் ரன் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.
243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) இடம்பெற்ற பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன்(இந்தியா) கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் உட்பட 11 தலைவர்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஜேடியுவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்களில் முன்னாள் அமைச்சர் சைலேஷ் குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் ஷியாம் பகதூர் சிங் மற்றும் சுதர்சன் குமார், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர்கள் சஞ்சய் பிரசாத் மற்றும் ரன் விஜய் சிங் ஆகியோர் அடங்குவர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இந்த தலைவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






