search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நாங்கள் துரோகிகள் என்றால் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்களா?: ஏக்நாத் ஷிண்டே கேள்வி
    X

    புனே பொதுக்கூட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே பேசிய காட்சி.

    நாங்கள் துரோகிகள் என்றால் மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்களா?: ஏக்நாத் ஷிண்டே கேள்வி

    • உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 4-வது இடத்தை தான் பிடித்தது.
    • எங்களது முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது.

    மும்பை :

    கட்சிக்கு எதிராக திரும்பிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சிவசேனா கட்சி தலைவர்கள் துரோகிகள் என கூறிவருகின்றனர்.

    இந்தநிலையில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று புனேயில் சாஸ்வத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தேர்தலில் சிவசேனா 4-வது இடத்தை தான் பிடித்தது. 2019-ல் பா.ஜனதா, சிவசேனா ஆட்சி வந்து இருந்தால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இல்லாமல் போயிருக்கும். ஆனால் சிவசேனாவால் அவர்களுக்கு புதிய வாழ்க்கை கிடைத்தது. தற்போது எங்களை மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பார்க்கிறது. எங்களது முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது. உலகமே ஏக்நாத் ஷிண்டே, அவருடன் சேர்ந்த 50 பேர் யார் என கேட்டது.

    நாங்கள் துரோகிகளா?. நாங்கள் துரோகிகள் என்றால் சாமானிய மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்து இருப்பார்களா?. இந்த பொதுக்கூட்டத்துக்கு இவ்வளவு கூட்டம் திரண்டு இருக்குமா?. அப்படியெனில் பால்தாக்கரேவின் சிவசேனாவை காப்பாற்ற நாங்கள் எடுத்த நிலைப்பாட்டை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×