என் மலர்

  இந்தியா

  லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
  X

  லாட்டரி அதிபர் மார்ட்டின்

  லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.173 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2019-ம் ஆண்டில் மார்ட்டின் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
  • ரூ.258 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த 2019-ம் ஆண்டில் முடக்கியது.

  புதுடெல்லி:

  கோவையைச் சேர்ந்தவர் மார்ட்டின். லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்த பின் கேரளா, கொல்கத்தாவில் அதிகளவில் லாட்டரி விற்பனைக் கிளைகளை தொடங்கியவர்.

  கடந்த 2019-ம் ஆண்டில் மார்ட்டின் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 72 இடங்களில் நடத்திய சோதனையில், கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைர நகைகள், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

  இதற்கிடையே, லாட்டரி தொழிலில் கிடைத்த 910 கோடி ரூபாயை மறைத்து 40க்கு மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்தது, அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தின் வாயிலாக அசையும், அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்தது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

  அதன்படி, 2019ல் மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.258 கோடி மதிப்பிலான சொத்துக்கள், 2021ல் ரூ.19.59 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

  இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருடன் தொடர்புடைய ரூ.173.48 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

  Next Story
  ×