search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பணமோசடி வழக்கு - சத்தீஸ்கர் முதல் மந்திரியின் துணை செயலாளரை கைது செய்தது அமலாக்கத்துறை
    X

    சௌமியா சௌராசியா

    பணமோசடி வழக்கு - சத்தீஸ்கர் முதல் மந்திரியின் துணை செயலாளரை கைது செய்தது அமலாக்கத்துறை

    • சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா.
    • இவரை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அவரிடம் கடந்த இரு மாதங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், பணமோசடி வழக்கில் சௌமியா சௌராசியாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் பதிவு செய்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×