என் மலர்tooltip icon

    இந்தியா

    எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்- உச்சநீதிமன்றம் நீதிபதி
    X

    எங்களில் கடவுளை பார்க்காதீர்கள்: நீதியில் கடவுளை பாருங்கள்- உச்சநீதிமன்றம் நீதிபதி

    • நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மூலம் சரி செய்யப்படுகிறார்கள் என கட்சிக்காரர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
    • ஏதாவது நேர்மையின்மை நடப்பதை கண்டறிந்தால், வழக்குகளில் இருந்து நாங்கள் விலகுகிறோம்.

    எங்களில் கடவுளை பார்க்க வேண்டாம்: நீதியில் கடவுளை பாருங்கள்- உச்சநீதிமன்றம் நீதிபதி/ Don't see God in us, see God in justice Supreme Court

    உச்சநீதிமன்றத்தில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனு விசாரணையின்போது, எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். நீதியில் கடவுளை பாருங்கள் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநில கோவில் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கே. வினோத் சந்திரன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "எனது கட்சிக்காரர் எனது சொல்லை கேட்பதில்லை. நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மூலம் சரி செய்யப்படுகிறார்கள் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது மிகவும் அவமதிப்பானது. ஏதாவது நேர்மையின்மை நடப்பதை கண்டறிந்தால், வழக்குகளில் இருந்து நாங்கள் விலகுகிறோம். எங்கள் நீதிபதிகளில் கடவுளைக் காண்கிறோம்" எனத் தெரிவித்தார்.

    உடனே நீதிபதி சுந்தரேஷ் "எங்களில் கடவுளை பார்க்காதீர்கள். தயவு செய்து நீதியில் கடவுளை பாருங்கள்" எனக் குறிப்பிட்டார்.

    மேலும், பெஞ்ச் வழக்கறிஞரை வழக்கில் இருந்து விடுவித்துக் கொள்ள அனுமதி அளித்தது.

    Next Story
    ×