என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய முகமூடி அணிந்த காட்டு ராஜ்ஜியத்தை நம்பாதீர்கள்: பீகார் மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்
    X

    புதிய முகமூடி அணிந்த காட்டு ராஜ்ஜியத்தை நம்பாதீர்கள்: பீகார் மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்

    • நம்பகத்தன்மையான முகமான நிதிஷ் குமாரின் கீழ் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும்.
    • யார் தங்களைத் தலைமை தாங்கப் போகிறார்கள் என எதிர்க்கட்சிகளுக்கு தெரியாது.

    பீகாரில் அடுத்த மாதம் 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, மூன்று நாள் பயணமாக பீகார் சென்றிருந்தார்.

    இன்றுடன் அவருடைய 3 நாள் பயணம் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய முகமூடி அணிந்த காட்டு ராஜ்ஜியத்தை நம்பாதீர்கள் என பீகார் மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது தொட்ரபாக அமித் ஷா கூறியதாவது:-

    கடந்த 20 வருடங்களாக நாங்கள் பள்ளத்தை நிரப்பியது போன்று பீகார் மக்களின் ஆசிகளை பெற நான் இங்கு வந்துள்ளேன், பள்ளத்தை நிரப்பிய நிலையில், தற்போதுள்ள உறுதியான தரையில் ஒரு பிரமாண்டமான கட்டமைப்பைக் கட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

    புதிய முகமூடி அணிந்து காட்டு ராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வருபவர்களை நம்ப வேண்டாம் கேட்டுக்கொள்கிறேன். நம்பகத்தன்மையான முகமான நிதிஷ் குமாரின் கீழ் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும். மத்தியில் இருந்து பிரதமர் மோடியும், பீகார் மாநிலத்தில் இருநது நிதிஷ் குமாரும் பல வருடங்களாக உருவாக்கியதை, மேலும் வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்ல இது உதவும்.

    பிரசாந்த் கிஷோர் புதிய கட்சியைத் தொடங்கி, முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடுகிறார். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு அவரைப் பற்றிப் பேசுவோம்.

    தேர்தலுக்கு முன்னதாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏராளமான இலவசங்களை அறிவித்ததாகவும், ஆட்சிக் காலம் முழுவதும் மக்களின் துயரங்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.

    எதிர்க்கட்சிகள் தங்களைப் பற்றி கவலைப்படுவதால் அப்படிச் சொல்கின்றன. யார் தங்களைத் தலைமை தாங்கப் போகிறார்கள், எந்தக் கட்சி யாரை எந்தத் தொகுதியில் நிறுத்த விரும்புகிறது என்பது அவர்களுக்கே தெரியாது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×