search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூசாரியால் பிரிந்த தம்பதியை இணைத்து வைத்த நீதிபதி
    X

    பூசாரியால் பிரிந்த தம்பதியை இணைத்து வைத்த நீதிபதி

    • கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார்.
    • மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில் சென்று குறி கேட்டுள்ளார்.

    கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார். அதன்படி, தனது மனைவியை பிரிய மஞ்சுநாத் முடிவு செய்தார். அத்துடன் மனைவியுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும், விவாகரத்து வழங்கும்படியும் துமகூரு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் மஞ்சுநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதியின் தொடர் விசாரணையில் பூசாரி கூறியதாலே மஞ்சுநாத் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிபதி தம்பதியை சேர்த்துவைக்கும் பொருட்டு மஞ்சுநாத், பார்வதம்மாவை அழைத்து தனித்தனியாக பேசினார்.

    மூட நம்பிக்கையால் மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்திருப்பது சரியில்லை. மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். இதையடுத்து, தனது மனைவி பார்வதம்மாவுடன் சேர்ந்து வாழ மஞ்சுநாத் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து கோர்ட்டிலேயே நீதிபதி முன்னிலையில் மஞ்சுநாத்தும், பார்வதம்மாவும் மாலை அணிவித்து கொண்டனர்.

    Next Story
    ×