என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
    X

    திருப்பதியில் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

    • வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
    • திருப்பதியில் நேற்று 83 ஆயிரத்து 960 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வார இறுதி நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை காரணமாக சனிக்கிழமை மாலை முதல் ஏழுமலையானை தரிசிப்பதற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது.

    நேற்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 8 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 83 ஆயிரத்து 960 பேர் தரிசனம் செய்தனர். 32 ஆயிரத்து 342 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.96 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×