search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சட்டென்று மாறிய வானிலை: டெல்லியில் லேசான மழை
    X

    சட்டென்று மாறிய வானிலை: டெல்லியில் லேசான மழை

    • டெல்லியின் அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு.
    • செயற்கை மழை மூலமாக காற்று மாசை குறைக்க டெல்லி அரசு திட்டம்.

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக காற்று மாசு மிகவும் மோசகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வர உச்சநீதிமன்றம் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை மழை மூலமாக காற்று மாசுவை குறைக்க திட்டமிட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென டெல்லியில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மாசுவால் சூழப்பட்ட டெல்லி, இன்று காலை பளிச்சென ஆகியுள்ளது. காற்று மாசு மறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், நடைபயிற்சி மேற்கொள்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    என்றாலும், முதியவர்கள் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து செல்வது சிறந்ததாகும். டெல்லியில் அருகில் உள்ள மாநிலங்கள் விவசாயக்கழிவுகளை எரிப்பதால், குளிர்காலத்தில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையை டெல்லி எதிர்கொண்டு வருகிறது.

    Next Story
    ×